Friday, May 7, 2010

நான் ரசித்த சில வரிகள்

ஒரு பள்ளத்தாக்கு முழுவதும் பூக்கள் பூத்து இருந்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?????

உன்னோடு நான் இருந்த ஒவ்வோவொரு மணித்துளியும் மரணத்தின் பிடியினிலும் மறவாது கண்மணியே ......

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா? உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்....

கற்பு முக்கியம் .... கருவை கலைத்துவிடு.....

ஒரு மரத்திலிருந்து ஒரு மலர் உதிர்ந்தாலும் , இந்த உலகத்திலிருந்து ஒரு உயிர் பிரிந்தாலும் இழப்பு இழப்புதான்... இழப்பில் எதும் வித்தியாசம் இல்லை....

காதல் இருக்கும் பயத்தினில்தான் .. கடவுள் பூமிக்கு வருவதில்லை.. மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் தான் அலைவான் வீதினிலே...

பூக்களுக்கு கூட வேர்க்குமா? உன் நெற்றி வியர்வைதுளியில் எழுந்த வினா இது ..

உன் நிருவாணம் கூட அடி சாதாரணம் நேற்று.... உன் கால் கெண்டையின் வெண்மை அடி தீ மூட்டுதே இன்று....

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை......... பெண் இல்லாத ஊரில் கொடிதான் பூ பூப்பதில்லை .....

--நன்றி வைரமுத்துவின் கவிதைகள் .. சில தமிழ் பாடல்கள் .. :)...